Home /local-news /

நாமக்கல்: நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

நாமக்கல்: நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்படும் இடங்கள் இவைதான்!

Power cut

Power cut

Namakkal: நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை வியாழக்கிழமை (24.03.2022)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நாளை (மார்ச் 24 - வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாமக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை வியாழக்கிழமை (24.03.2022)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி என்ஜிஓஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி