Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்..

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 8) மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்..

நாளை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்த பகுதிகள்.!

நாளை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்த பகுதிகள்.!

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஏப்ரல் 8 - வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில்,

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஏப்ரல் 8 - வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கபிலர்மலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ். கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி