Home /local-news /

நாமக்கல்: ஆட்டுக்கல், அம்மிக்கல் செதுக்கி விற்பனை செய்யும் தம்பதி!

நாமக்கல்: ஆட்டுக்கல், அம்மிக்கல் செதுக்கி விற்பனை செய்யும் தம்பதி!

நாமக்கல்:

நாமக்கல்: ஆட்டுக்கல், அம்மிக்கல் செதுக்கி விற்பனை செய்யும் தம்பதி!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் செல்லும் வழியில்  உள்ளது சந்தைப்பேட்டை.  கிரைண்டர், மிக்சி என மக்கள் தொடர்?

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் செல்லும் வழியில் உள்ளது சந்தைப்பேட்டை. கிரைண்டர், மிக்சி என மக்கள் தொடர்ந்து மாறி வந்தாலும் இன்றும் ஆட்டுக்கல், அம்மிக்கல் என நம் பாட்டி காலத்தில் பயன்படுத்திய பொருட்களை கணவன் மனைவி ஜோடியாக சேர்ந்து தங்கள் கைகளாலேயே செதுக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

    பொதுவாக கிரைண்டர், மிக்சி சமையல் வேலைபளு மற்றும் நேரத்தை குறைப்பதற்காக பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஆட்டுக்கல், அம்மிக்கல்லில் உட்கார்ந்து கைகளால் அரைக்க வேண்டும். இதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். ஒருவேளை உணவு கூட நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இப்படி பொறுமையாக உட்கார்ந்து, அரைத்து‌ சமையல் செய்வதற்கு நேரமில்லாமல் தான் கிரைண்டர், மிக்சி என மாற்றிக் கொண்டு வருகிறோம்.

    ஆனால் இன்றும் இதன் தேவைகளை தெரிந்து ஒரு சில மக்களாவது வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தங்களுடைய கைகளாலேயே செதுக்கி விற்பனை செய்வதாக கூறுகிறார்கள் இத்தம்பதி.

    இதுகுறித்து வெங்கடேஷ்-ராணி தம்பதியிடம் நாம் கேட்ட போது, \"கடந்த 10 வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதற்கு முன் காட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தோம். அங்கு, போதிய அளவு வேலை இல்லாததால் இந்த தொழிலுக்கு மாறி செய்து வருகிறோம். முதலில் இது நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. தற்போது மக்கள் இதில் விருப்பம் காட்டாமல் இருப்பதானால் ஒரு வாரத்தில் ஒரு கல்லை விற்பனை செய்வது கூட கடினமாக உள்ளது.

    ஒரு கல்லை முழுமையாக செய்து முடிப்பதற்கு 56 நாட்கள் ஆகும். அதனை 2500 ரூபாய் அளவில் விற்பனை செய்வோம். இதில் வரும் வருமானத்தை வைத்துதான் எங்களது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டு இருக்கிறோம். இதுபோன்ற, கல்லை மிஷின் மூலமாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

    ஆனால், கைகளால் செதுக்கியது போன்ற வடிவம் கிடைக்காது. இதுபோன்று ஆட்டுக்கல், அம்மியில் அரைத்து உணவுகளை உட்கொண்டால் உடலுக்கும் நன்றாக இருக்கும்" என்று கூறினார்கள்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி