Home /local-news /

நாமக்கல்: பெண்களின் பாதுகாப்பில் உதவி மையத்தின் பங்களிப்பு! 

நாமக்கல்: பெண்களின் பாதுகாப்பில் உதவி மையத்தின் பங்களிப்பு! 

நாமக்கல்: பெண்களின் பாதுகாப்பில் உதவி மையத்தின் பங்களிப்பு! 

நாமக்கல்: பெண்களின் பாதுகாப்பில் உதவி மையத்தின் பங்களிப்பு! 

Women's Safety | கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இந்நாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மகளிர் தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பெண்கள் பலரும் இனிப்புகளை வழங்கியும் கேக்குகள் வெட்டியும் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.

    கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இந்நாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை தங்கள் கவனத்திற்கு வரும் போது நேரிடையாக தலையிட்டு அவர்களுக்கு தேவையான பாதுக்காப்பும், உதவிகளையும் செய்து வருகிறது மகளிர் உதவி மையம்.

    இதில் பெண்களின் பாதுகாப்பில் நாமக்கல் மாவட்ட சமூகநலத்துறை உதவி மையம் முக்கிய பங்காற்றி வருகின்றது. அதாவது 1098, 181 மற்றும் மாவட்ட சமூக நல துறை கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். இதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக பெற்று தீர்வு காண முடியும் என்று துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

    கடந்த ஆண்டு மட்டும் நாமக்கல் மாவட்டத்தின் உதவி மையம் மூலம் 440 வழக்குகள் பெறப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மாதத்திற்கு 30க்கு மேற்பட்ட வழக்குகள் வருகின்ற. குடும்ப பிரச்சினைகள் மூலமாகவும் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளான 160 வழக்குகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. இதில் 54 வழக்குகளை நீதி மன்றத்தில் அனுப்பப்பட்டும், 106 வழக்குகளை உதவி மையம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றோர் மீட்பு போன்ற அதிகமான வழக்குகள் பதியப்படுவதாக கூறுகின்றனர்.

    இதனிடையே உதவி மையம் மூலமாகவும், மகளிர் காவல் நிலையம் மூலமாகவும் வழக்குகள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் வழக்குகள் தூரமாக இருக்கும் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் துறையினரிடம் தெரிவித்து தாமதமின்றி உடனடியாக சென்று அப்பகுதியில் பாதிக்கப்பட்டவரை மீட்க உதவி செய்யப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் மீட்கப்பட்டு வருபவர்களுக்கு காவல் உதவி, சட்டவசதி, மருத்துவ வசதி, ஐந்து நாட்களுக்கு இருப்பிட வசதி போன்றவை உதவி மையம் மூலம் ஏற்படுத்தி தருகின்றனர்.

    இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களின் வெற்றிக்குப் பின்னாடி ஒருபெண்ணின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்பது உண்மை.

    இச்சமூகத்தில் அனைத்து வகையான வளர்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டு, ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு பாடுபவர்களில் பெண்களின் பங்களிப்பு பெரிதளவு இருக்கிறது என்பதில் எவ்வித மாற்றமில்லை. தற்போது நம்மை பெரும்பாலும் வழி நடத்தி செல்பவர்கள் பெண்கள். இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை கூட்டிச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

    இத்தகைய சூழலில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இதுபோன்ற உதவி மையங்கள் எந்நேரமும் செயல்படுவது பாதுகாப்புக்குரியதாக அனைவரும் கருதப்பட வேண்டும்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் உதவி மையம் மூலம் பெறப்படும் வழக்குகள் வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மகளிர் தினமான இன்று உதவி மையம் மூலம் எவ்வித வழக்குகளும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி