Home /local-news /

நாமக்கல்: உலக காசநோய் தினம்- கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: உலக காசநோய் தினம்- கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ வெப்படை செல்லும் வழியில் உள்ள ஆனங்கூர் என்ற ஊரில் உள்ள கிராம மக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

    2025-ல் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக்க வேண்டும் என்று அதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதற்கான பயணத்தை நோக்கி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் மக்களிடையே காசநோய் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ வெப்படை செல்லும் வழியில் உள்ள ஆனங்கூர் என்ற ஊரில் உள்ள கிராம மக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் இறையமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியை கே.எஸ்.ஆர் கல்லூரி முதல்வர் முனைவர் திரு.வே. இராதாகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் மருத்துவர் இரா.வாசுதேவன் அறிவுறுத்தலின்படி வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் அருள் குகன், மருத்துவர் சந்தியா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட நலக் கல்வியாளர் ராமச்சந்திரன் அவர்கள் காச நோய் பற்றியும் பரவும் விதம் சிகிச்சை முறைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வில் மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியினை கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி