நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ரங்கனூர் நால்ரோடு வழியாக, வெப்படைக்கு அட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஆட்டோவை குமாரபாளையத்தைச் சேர்ந்த 55க்கு மேல் வயது கொண்ட சண்முகவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ அழகாபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்ததுபோது, திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது.
ஆட்டோ தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சண்முகவேல், ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு உடனடியாக இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் தீயானது ஆட்டோவில் இருந்த அட்டைகளில் பரவி, முழுவதுமாக பற்றி எரியத் தொடங்கி உள்ளது.
உடனடியாக இதுகுறித்து வெப்படை மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். ஆட்டோவில் இருந்த அட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. ஆட்டோ முழுவதுமாக எரிந்து பலத்த நாசமானது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.