சேலம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நாமக்கல் மையம் ஆகியவை சாா்பில், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள என்ஜிஓஓ கட்டடத்தில் 37வது தேசிய புத்தக கண்காட்சி கடந்த மாதம் 25 தேதி தொடங்கப்பட்டது.
இக்கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கணினி, இணையம் சாா்ந்தவை, சமூக அறிவியல், வரலாறு, கதைகள், கட்டுரைகள், கவிதை, நாடகம், இலக்கணம், பொது அறிவு நூல்கள் மற்றும் சிறந்த கல்வி அறிஞா்கள், பிரபல எழுத்தாளா்களின் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் மத்திய அரசு நிறுவனங்களான நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, சாகித்ய அகாதெமி மற்றும் அம்பேத்கா் ஃபவுண்டேஷன் வெளியிட்ட நூல்களும், 100க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்களும் முன்னணி எழுத்தாளா்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சிக்கு வருபவர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இக்கண்காட்சி வருடாவருடம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் சேலம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீட்டு நூல்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. வரும் மார்ச் 31 தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
தற்போது வளர்ந்து வரும் காலத்தில் மொபைல் போன்களின் வளர்ச்சி அதிகமானதால் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. புத்தக வாசிப்பதன் மூலம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் தெளிவாக யோசிக்க தோன்றும். ஆகையால் மக்களிடையே குறிப்பாக மாணவ மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.