Home /local-news /

நாமக்கல்: முன்னோர் நினைவாக கற்கள் நட்டு கும்பிடும் விநோத வழிபாடு! 

நாமக்கல்: முன்னோர் நினைவாக கற்கள் நட்டு கும்பிடும் விநோத வழிபாடு! 

நடுகல்

நடுகல் முன் வழிபடும் பெண்கள்

Namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் ஆனங்கூர் செல்லும் வழியில் உள்ளது கந்தசாமி நகர். இங்கு,  இறந்து போனவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கற்கள் நட்டு,  பிடித்த உணவுகளை படையலிட்டு கிழே விழுந்து கும்பிடும் விநோத வழிபாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் ஆனங்கூர் செல்லும் வழியில் உள்ளது கந்தசாமி நகர். இங்கு, இறந்து போனவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கற்கள் நட்டு, பிடித்த உணவுகளை படையலிட்டு கிழே விழுந்து கும்பிடும் விநோத வழிபாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இவ்விழாவானது இறந்த பின் அவர்களின் நினைவாக நடுகல் என்று வைக்கப்படுகிறது. அதன்பின், தாய் தந்தையர் இறந்த பின்பு அவர்களை வணங்க வேண்டும் என்பதற்காக கற்சிலைகள் போன்று வைக்கப்பட்டு, அக்கற்களுக்கு புத்தாடைகள் மற்றும் மாலைகள் அணிவித்து, பிடித்த உணவுகளை படையலிட்டு பூஜை செய்கின்றனர்.

    பெண்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒன்றாக சேர்ந்து கற்சிலைகளுக்கு கீழே விழுந்து 3 முறை சுற்றி வந்து வழிபட்டனர். இதில், ஊர் மக்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு நன்றிக் கடனையும் செலுத்தினர்.

    இதுகுறித்து அவ்வூர் மக்கள் கூறுகையில், \"நாங்கள் காலகாலமாக தை மாத இறுதியில் முன்னோர்களை கும்பிடும் விழாவை நடத்தி வருகிறோம். இதில், ஊர் மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் தவறாமல் கலந்து கொள்வார்கள். பொதுவாக, ஒருவர் இறந்த விட்டால் அவர்கள் இறந்த நாளில் திதி குடுத்து வணங்கி வருவார்கள்.

    அதேபோல்தான் இதுவும். ஆனால், எங்கள் வழக்கப்படி ஊரில் உள்ள மக்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். மேலும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள் வேற எந்த ஊரில் இறந்து விட்டாலும் அவர்களின் நினைவாக பெயர் பதித்து இங்கு கற்கள் நட்டு வழிபடுவோம்\" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி