Home /local-news /

கேரள சோட்டானிக்கரை கோயிலுக்கு மாற்றான நாமக்கல் நீரோடும் பகவதியம்மன் கோயில்!!

கேரள சோட்டானிக்கரை கோயிலுக்கு மாற்றான நாமக்கல் நீரோடும் பகவதியம்மன் கோயில்!!

நாமக்கல்:

நாமக்கல்: சோட்டானிக்கரை கோயிலுக்கு மாற்றான நாமக்கல் நீரோடும் பகவதியம்மன் கோயில்!

Namakkal: அக்கல்லுக்கு அபூர்வ சக்தி இருக்கிறது என்று நினைத்து மக்கள் வழிபட தொடங்கி உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீரோடும் பகவதி அம்மன்கோயில் உள்ளது.

    இக்கோயிலானது,கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு மாற்றான கோயில் என்று இவ்வூர் மக்களால் போற்றப்படுகிறது. ஏனென்றால் கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தான் வேண்டிச் செல்கிறார்களாம். அதுமட்டுமின்றி சுற்று வட்டார பகுதி மக்கள், பேய் பிடித்து இருப்பவர்களைஇக்கோயிலுக்கு அழைத்து வந்து பேய் ஓட்டிச் செல்வார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

    இக்கோயில் முதன் முதலில் குன்னத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு நபர்கள் உருளை போன்ற கல்லை எடுத்துக் கொண்டு இவ்வூருக்கு வந்து உள்ளனர். இங்கு வரும் போது அக்கல் சாதாரண எடையை விட பல மடங்கு எடை கொண்டதாக மாறியுள்ளது. இதனால் அக்கல்லை கிழே போட்டுவிட்டு மீண்டும் தூக்கி உள்ளனர். ஆனால் அவ்விடத்தை விட்டு கல் நகரவில்லை.

    இதனால் அக்கல்லுக்கு அபூர்வ சக்தி இருக்கிறது என்று நினைத்து வழிபட தொடங்கி உள்ளனர். மேலும் இப்பகுதியில் நீருற்று அதிகம் நிறைந்து உள்ள பகுதியாக இருந்ததால் இது நீரோடும் பகவதி அம்மன் என்ற பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து கோயிலைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இக்கோயில் பழமைவாய்ந்த ஒன்று என கூறுவதற்கு காரணம், கோயில் அருகில் உள்ள இச்சி மரம் தான். கோயில் உருவானது முதல் இம்மரம் அதே கம்பீரத்துடன் எழுந்து பரந்து விரிந்துள்ளது. கோயிலில் பசு மாடு வந்து பால் கொடுத்தது மூலம் வெண்ணங்கொடி கருப்பனார் என்ற சாமியும் இங்கு உருவாகி இருக்கிறது.

    மேலும் மாட்டுப் பண்டிதர் காரர் என்ற சிலையும் உள்ளது. ஊரில் உள்ள கால்நடைகளுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் இச்சிலை முன்பு வந்து தீருநீறு இட்டுச் சென்றால் குணமாகும் என்று நம்புகிறோம். இக்கோயில் திருவிழா வருடா வருடம் மார்கழி மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும்.

    அத்திருவிழா சுற்று வட்டார பகுதிகளில் முக்கிய ஒன்றாகவும் இருக்கிறது. இதில் குண்டம் இறங்குதல், கரகம் எடுத்தல், தீய சக்திகளை விரட்டுவது போன்ற நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி