Home /local-news /

நாமக்கல்: அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்திய ஆவத்திப்பாளையம் மக்கள்! 

நாமக்கல்: அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்திய ஆவத்திப்பாளையம் மக்கள்! 

நாமக்கல்: 

நாமக்கல்:  அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்திய ஆவத்திப்பாளையம் மக்கள்! 

Kumarapalayam: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் ஆவத்திப்பாளையம் என்ற ஊரில் பெரிய மாரியம்மன் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதல் கொண்டு திருவிழா தொடங்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் ஆவத்திப்பாளையம் என்ற ஊரில் பெரிய மாரியம்மன் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதல் கொண்டு திருவிழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வார காலமாக திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், பெண்கள் உட்பட ஆண்கள் என இருவரும் வாய் அலகு மற்றும் காவடி அலகு குத்தி, சாமி அழைத்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பெரிய மாரியம்மனுக்கு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினார்.

    அதுமட்டுமின்றி வாழைக்கன்று மற்றும் வாழைப்பழம், தேங்காய் வைத்து பெரிய அளவிலான மாவிளக்கு தட்டுடன் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், திரளான ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், \"வருடாவருடம் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறும். பெரிய மாரியம்மனை நினைத்து வேண்டுதல் வைத்து நிறைவேறினால் அலகு குத்தி வந்து மாரியம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

    இத்திருவிழா ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சரிசமமாக அலகு குத்தி வருவார்கள். மேலும் அக்கினி கரம், முதல் வண்டி வேடிக்கை, மஞ்சள் நீராடல் வரை என அனைத்து நிகழ்ச்சிகலும் சிறப்பாக நடைபெறும். தற்போது, கொரோனா காரணமாக உள்ளூர் மக்கள் மட்டும் பங்கேற்று திருவிழா நடைபெற்றது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி