நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் பேரணியாக வந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், OHT ஆப்பரேட்டர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிக்கல்வி பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றி உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கைகள் உடன் நிறைவேற்ற வேண்டும்.
தூய்மை காவலர்களுக்கு மகளிர் குழு மூலம் சம்பளம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியை இணைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
OHT ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து உடனடியாக அமலாக்க வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டு காலமாக பாக்கி உள்ள ஊதியத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீ.கண்ணன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ் சு.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.