இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில அளவிலான சைக்கிள் பேரணியை இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு, குமாரபாளையம் ஒன்றிய குழு சார்பாக மலர் தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது\" என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே1 ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள தமிழகத்தில் நான்கு மூலைகளில் இருந்து (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) 3000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை வந்து இருந்த சைக்கிள் பேரணியில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். மேலும் இவர்களை மலர் தூவி வரவேற்றனர்.
இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்மாநில தலைவர் A.T.கண்ணன் நாமக்கல் மாவட்ட செயலாளர் தே. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். குமாரபாளையம் ஒன்றிய குழு சார்பாக சைக்கிள் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு நுங்கு,கரும்புச்சாறு வழங்கப்பட்டது.
பயணக்குழு தலைவர் Dyfi-ன் மாநில துணைத்தலைவர் பாலசந்திரபோஸ் அவர்களுக்கு குமாரபாளையம் அரசு கல்லூரி கிளை உறுப்பினர் ஸ்ரீ ரகுராமசந்திரன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.