Home /local-news /

நாமக்கல்: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சியம்மன் கோயில்! 

நாமக்கல்: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சியம்மன் கோயில்! 

நாமக்கல்:

நாமக்கல்: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சியம்மன் கோயில்! 

Namakkal Pachhaiamman Temple: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் மலை அடிவாரம். மலை ஏறுவது போன்ற அமைப்புடன் நுழைவு வாயிலில் ஒரே ஒரு கோபுரத்துடன் அமைந்துள்ளது, பச்சியம்மன் என்ற 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில்.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ நாமக்கல் செல்லும் வழியில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் மலை அடிவாரம். மலை ஏறுவது போன்ற அமைப்புடன் நுழைவு வாயிலில் ஒரே ஒரு கோபுரத்துடன் அமைந்துள்ளது, பச்சியம்மன் என்ற 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில்.

    இக்கோயில் முதன் முதலில் சங்ககிரி பகுதியில் முன்னோர்கள் மூலம் வழிபட்டு வந்துள்ளனர். அதன் பின் பெரியவர்கள் சந்தைக்கு சந்தை மாட்டு வண்டியில் சென்று வந்துள்ளனர். பிறகு கொல்லிமலை அடிவாரத்தில் ஏழு கற்களை எடுத்து தலைக்கு வைத்து உறங்கி உள்ளனர். அந்த கற்கள் தங்களிடம் நாங்களும் வரவேண்டும் என்று கூறியதாம். பிறகு, அக்கற்களை சாக்கு பையில் போட்டு பசு மாட்டின் மேல் வைத்துக் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் வரும்போது பசு மாடு உட்கார்ந்துள்ளது. அங்கிருந்து எழுந்திருக்கவில்லை. இதனால், அக்கற்களை அங்கே நட்டு வழிபட தொடங்கி உள்ளனர். 50 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் பச்சியம்மன் என்ற சாமி உருவாகி உள்ளது.

    மேலும் கோயில் குறித்து பூசாரி கார்த்திக்கேயன் கூறுகையில், “எந்த கோயில்களில் இல்லாத ஈஸ்வரர் உருவ வடிவில் மன்னாத ஈஸ்வரராக இடம்பெற்றுள்ளார். ஏழு முனிஸ்வரகள் மற்றும் ஆஞ்சநேயருக்கு என்று தனியாக கோயில் என்ற இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் ஆடி மாதம் மற்றும் மஹா சிவராத்திரி அன்று இக்கோயில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று கூறுகிறார்கள். திருவிழா அன்று கத்தி வாக்கு கூறி தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெறும் என்று கூறினார்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி