நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஆஞ்சநேயா பிட்னஸ் ஜிம், மற்றும் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் இணைந்து ஆணழகன் போட்டி நடத்தினர்.இப்போட்டியில் பாடி பாடிபில்டர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
அரிமா சுமங்கலி திருமண மண்டபத்தில் இராசிபுரம் ஆஞ்சநேயா பிட்னஸ் ஜிம், மற்றும் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் இணைந்து ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 7 - பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 135 பாடிபில்டர்ஸ் கலந்துகொண்டனர். 55,60,65,70,75,80 என்ற எடை பிரிவில் பல்வேறு பாடி பாடிபில்டர்கள் கலந்துகொண்டனர்.
70 கிலோ பிரிவில் இராசிபுரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த அன்புராஜ், மிஸ்டர் நாமக்கல் ஆணழகன் பட்டத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசு பெரியமணலியை சேர்ந்த பாடிபில்டர் சூர்யா என்பவருக்கு அளித்தனர். மூன்றாம் பரிசு ராசிபுரத்தை சேர்ந்த சந்ருகுமார் தட்டிச் சென்றனர். டிவி போன்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ் கேடயம் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதனிடையே, போட்டியை காண 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்றவர்களை ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
செய்தியாளர் : மதன்குமார்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.