மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி (நாளை வியாழக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையை மட்டும் பேசுதல், முறையற்ற வழியில் எந்த பொருளையும் ஏற்கக்கூடாது, அறநெறி நீங்கி இன்பம் காணக்கூடாது என்ற சிறந்த சிந்தனைகளை மகாவீர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். பல நன்மைகள் அவர் செய்து உள்ளதால் இவரின் புகழை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டு மகாவீர் ஜெயந்தியின் போது மதுபானக்கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படுகிறது.
இதனிடையே நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி (வியாழக்கிழமை) அன்று இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்கள் திறக்கப்பட்டாலோ அல்லது மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.