Home /News /local-news /

நாமக்கல் : கடந்த ஆண்டை விட மஞ்சள் கொத்து விற்பனை குறைவு -வியாபாரிகள் கவலை

நாமக்கல் : கடந்த ஆண்டை விட மஞ்சள் கொத்து விற்பனை குறைவு -வியாபாரிகள் கவலை

மஞ்சள்

மஞ்சள் கொத்து

பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சா்க்கரை மற்றும் வெண் பொங்கலிட்டு வழிபடுவார்கள். பொங்கல் வைக்கும் பானைகளின் கழுத்தில் மஞ்சள் கொத்துகளை சுற்றி கட்டி வைத்து கொண்டாடுவார்கள்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு உழவர் சந்தை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மஞ்சள் கொத்துகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.

    தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் வரத்து குறைவாக உள்ளதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை குறைவாகவே உள்ளது என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சா்க்கரை மற்றும் வெண் பொங்கலிட்டு வழிபடுவார்கள். பொங்கல் வைக்கும் பானைகளின் கழுத்தில் மஞ்சள் கொத்துகளை சுற்றி கட்டி வைத்து கொண்டாடுவார்கள். இனி வரும் வாழ்க்கை மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் கொத்து வைத்தும், நோய் கிருமிகள் அணுகாமல் இருப்பதற்காகவும் பொங்கல் திருநாளில் மஞ்சள் கொத்து பயன்படுத்துவார்கள்.

    தற்போது, இந்தாண்டு பெரிதளவு மக்கள் இதில் ஆர்வமில்லாமல் உள்ளதால், மஞ்சள் கொத்துகள் விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளதாக கூறுகிறார்கள்.

    இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "வருடாவருடம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு இப்பகுதியில் மஞ்சள் கொத்துகளை, வெளியூரிலிருந்து வாங்கி வந்து இங்கு வியாபாரம் செய்வது வழக்கம். தற்போது மக்கள் வரவு குறைவாகவே உள்ளது. மாட்டுப்பொங்கல் வரைக்கும் இதன் வியாபாரம் இருக்கும். அதுவரை ஏதாவது வியாபாரம் ஆனால்தான் முதலீடு செய்த பணத்தையாவது எடுக்க முடியும் என்று நம்பிக்கையில் உட்கார்ந்து உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal, Pongal

    அடுத்த செய்தி