Home /local-news /

நாமக்கல் : தைப்பொங்கலை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற கோலப் போட்டி!

நாமக்கல் : தைப்பொங்கலை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற கோலப் போட்டி!

நாமக்கல்:

நாமக்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு கோல போட்டி!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் சூரியம்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு வருடாவருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தைப்ப

  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் சூரியம்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு வருடாவருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தைப்பொங்கல் விழாக்குழு சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

    இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் பெண்களுக்கான முக்கிய போட்டியாக கோலப்போட்டி நடைபெறும். இதில், ஊரில் உள்ள பெண்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பல வகையான கோலங்கள் போட்டு வீதியே கோலங்களாக நிறைந்து பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

    இதனிடையே இந்தாண்டிற்கான கோல போட்டியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கலர் கோலம் முதல் காய்கறி கோலம் என கண்களை கவரும் வகையில் கோலம் போட்டு அசத்தி இருந்தனர்.

    இதில், சிறந்த கோலம் போட்டு இருந்த பெண்களுக்கு பரிசுகளும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டன.
    மேலும் போட்டியில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இதுகுறித்து கோலப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களிடம் கேட்ட போது, "நாங்கள் வருடாவருடம் இந்த போட்டியில் கலந்து கொள்வோம். ஏனென்றால், இதில் எங்களுடைய திறமைகளை வெளிக் காட்டுவதற்கு ஒன்று.

    நாங்கள் வெளியூர்களில் இருந்தாலும் தைப் பொங்கல் அன்று தவறாமல் ஊருக்கு வந்து சேர்ந்து விடுவோம்.

    இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெரிதளவு பெண்கள் கலந்து கொள்ள வில்லை. இல்லையென்றால் இப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட கோலங்கள் இடம் பெறும்" என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி