Home /local-news /

நாமக்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு நடந்த கபடி போட்டி!

நாமக்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு நடந்த கபடி போட்டி!

நாமக்கல்:

நாமக்கல்: தைப்பொங்கலை முன்னிட்டு நடந்த கபடி போட்டி!

Namakkal News | இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால், தங்கள் ஊரில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்று போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் சூழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ளது சூரியம்பாளையம் என்ற ஊர். இங்கு, வருடாவருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்குந்தர் பேரவை விழாக்குழு சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

    இதில், முக்கியப் போட்டியாக ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் நடத்தப்படும். ஏனென்றால், இங்குள்ள இளைஞர்கள் பல்வேறு கபடி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் பெற வேண்டும் என்றும் கபடி போட்டியை ஊக்குவிக்கவேண்டும் என்ற வகையிலும் நடைபெறும்.

    இதில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பல அணிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவார்காள். ஆனால், இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால், தங்கள் ஊரில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்று போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் சூழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    இதுகுறித்து விழாக் குழுவினர் கூறுகையில், “கடந்த 63 ஆண்டுகளாக இங்கு தைப்பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இதில் 34 ஆண்டுகளாக செங்குந்தர் பேரவை சார்பாக சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டு வருகிறோம். இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழா நடத்தப்படுமா என்று கேள்வி குறியாக இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தினோம்.

    இவ்விழாவில் முக்கிய போட்டியாக கபடி போட்டி நடத்துவோம். இதில் ஏராளமான அணிகள் கலந்து கொள்ளும். ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் உள்ளதால், ஊரில் உள்ள 15க்கும் மேற்பட்ட அணிகள் மட்டும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்” என்று கூறினார்கள்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி