இஸ்லாம் மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். இஸ்லாமியார்களின் 5 கடமைகளில் ரம்ஜான் நோன்பு முக்கிய கடமையாகும் இருக்கிறது.
ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு அடுத்ததாக தென்படும் பிறையை கணக்கிட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி பிறை பார்த்து ஒருமாத காலமாக நோன்பு இருந்து வந்தனர். பின்னர் நேற்று பிறை பார்த்தவுடன் தங்களுடைய நோன்பை நிறைவு செய்தனர்.
இதனிடையே இன்று ஈகை திருநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே ஊர்வலமாக சென்றும் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் ஈத்கா மைதானத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். மேலும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் வாழ்வதற்கு பிரார்த்தனையும் செய்யப்பட்டது. மேலும் ஒரே இடத்தில் ஒன்று கூடி தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மசூதிகளில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு பிறகு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து சகோதர பாசத்தையும் உறவுகளையும் தழுவிக் கொண்டனர்.
செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.