Home /local-news /

சிறார்களை பாலியல் ரீதியாக சீண்டினால் சிறை.!

சிறார்களை பாலியல் ரீதியாக சீண்டினால் சிறை.!

பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தால் சிறைத் தண்டனை உறுதி!

பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தால் சிறைத் தண்டனை உறுதி!

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

    18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், பாலியல் தொல்லை தருவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் எண்ணங்களோடு பின்தொடா்வது, குழந்தைகளை தவறான எண்ணத்தில் கண்காணிப்பது, சைகைகள் காட்டுதல்,புகைப்படம் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள்.

    அதுமட்டுமின்றி இதுபோன்ற பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க நேரிடும். மேலும் இதுகுறித்து தகவல்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233103 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளவும். அல்லது சைல்டு லைன் எண் 1098 தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி