Home /local-news /

சொந்த செலவில் பள்ளிக்கு உதவிய ஆசிரியை.. நியாயவிலைக்கடையில் மதுபிரியர்கள் அட்டகாசம்.. நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

சொந்த செலவில் பள்ளிக்கு உதவிய ஆசிரியை.. நியாயவிலைக்கடையில் மதுபிரியர்கள் அட்டகாசம்.. நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்..

Namakkal

Namakkal

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  நாமக்கல் மாவட்டத்தில்  நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி போட்டி

  நாமக்கல் டூ ஈரோடு செல்லும் வழியில் ஐந்துபனை என்ற ஊர் உள்ளது. இங்கு ஆஞ்சநேயா கபடி குழு மற்றும் விடிவெள்ளி நண்பர்கள் குழு இணைந்து கபடி விளையாட்டை பெருமை படுத்தும் வகையிலும் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கபடி போட்டியை ஊக்குவிக்கும் வகையில் 20ம் ஆண்டு மாநில தழுவிய கபடி போட்டியாக நடத்தப்பட்டது.

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைவு

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களாக முட்டை தொடர் சரிவு சந்தித்து வருகிறது.

   உழவர் சந்தையில் காய்கறி விலை!

  நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

  வட்டார அளவிலான சுகாதார திருவிழா!

  நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் முகாமினை தொடங்கி வைத்தார்.

  முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளி இளம் சிறார் நலத்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, குடும்ப நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாய் சேய் நலம், நோய்த்தடுப்புத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

  200 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் திருக்கோயில் திருவிழா.

  செல்லப்பம்பட்டியில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பெரும் தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

  இந்த ஆண்டு திருவிழா கடந்த 6ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினசரி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

  அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் மதிவாணி பொருளுதவி வழங்கினார்

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப்பள்ளியில்35 ஆண்டுகளுக்கு மேலாக அலமேடு அரசு பள்ளிக்கூடம் ஒன்றாம் வகுப்பு மாணவர் மாணவிகளுக்கு மேஜைகள், நாற்காலிகள் இல்லாமல் மாணவ மாணவிகள் படித்து வந்தனர். இந்த நிலையில் அலமேடு பள்ளியில் பணியாற்றும் முதலாம் வகுப்பு ஆசிரியர் பெ. மதிவாணி அவர்களால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 45,000 ஆயிரம் மதிப்புள்ள மேஜைகள் மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றை தலைமையாசிரியர் மற்றும் அலமேடு கவுன்சிலர் சதீஷ் தனகோபால் அவர்கள் தலைமையில் அன்பளிப்பாக பள்ளிக்கு ஆசிரியர் மதிவாணி வழங்கினார்.

  நியாய விலைக் கடையில் மதுப் பிரியர்களின் அட்டகாசம்.

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உழவர் சந்தை எதிரில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் மது பிரியர்கள் கும்பலாக அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் ஆபாசமான வார்த்தைகளை பேசிக்கொண்டும், சில நேரங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் தினமும் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், சாலையோரம் நடந்து செல்வர்கள் அச்சமடைந்துள்ளனர்.

  கோடை வெயிலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

  கோடை வெயிலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, ஜூஸ் போன்றவற்றை வழங்கினார்.

  பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில்புதருக்குள் மறைந்திருந்த பாம்பு பிடிபட்டது

  பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டிடங்களை சுற்றியும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனிடையே சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதனை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு புதருக்குள் மறைந்திருந்த சாரை பாம்பை பிடித்தனர்.

  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

  நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட்டு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்கள் தனி அடையாளமாக விளங்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அணி தொகுப்பிற்கு யாழ் என்று பெயர் சூட்டப்பட்டது.

  செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
  Published by:Arun
  First published:

  Tags: Namakkal

  அடுத்த செய்தி