Home /local-news /

நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (03.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (03.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில்  நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    ரம்ஜான் முன்னிட்டு ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

    ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு அடுத்ததாக தென்படும் பிறையை கணக்கிட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி பிறை பார்த்து ஒருமாத காலமாக நோன்பு இருந்து வந்தனர். பின்னர் நேற்று பிறை பார்த்தவுடன் தங்களுடைய நோன்பை நிறைவு செய்தனர். இதனிடையே இன்று ஈகை திருநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே ஊர்வலமாக சென்றும் சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர்.
    மேலும் ஒரே இடத்தில் ஒன்று கூடி தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

    அக்ஷய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்

    அக்ஷய திருதியை முன்னிட்டு நாமக்கல்லில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். காலை 8 மணிக்கு முன்னதாகவே கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தை தொடங்கினார். திருமணம் மற்றும் தங்களின் வீட்டு விசேஷங்கள் என கடைவீதி உள்ள கடைகளில் பொதுமக்கள் திரண்டு நகைகள் வாங்கி சென்றனர்.

    நண்பர்களின் விடா முயற்சியால் உருவான பசுமை சாலை!

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் பசுமை நண்பர்கள் குழு என்ற அமைப்பினர் எங்கும் பசுமை என்ற‌ நோக்கில் சாலையோரத்தில் தொடர்ச்சியாக மரங்கள் நட்டு, தற்போது இது ஒரு பசுமை சாலை என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கி உள்ளனர்.

    நாமக்கலில் பலத்த காற்றுடன் மழை

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கி‌னாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்தது.

    நாமக்கல் மின்பகிர்மான வட்டம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் தேதிகள் அறிவிப்பு!

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாதந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேதிகள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் மே மாதத்திற்கான, மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலங்களில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்கள் குறைகள் தீர்க்க உள்ளது. ஆகையால் குறிப்பிட்ட தேதியில் மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் தெரிவிக்கலாம்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

     உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் ரம்ஜானை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் கறி கடைகளில் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி சென்றனர். இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி மற்றும் விருந்து அளிப்பதற்காக அதிக அளவு இறைச்சிகளை வாங்கி செல்ல திரண்டதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இடி விழுந்து 16 ஆடுகள் பலி

    சமயசங்கிலி பகுதியில் பொன்னுசாமி என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வீடு அருகே இருக்கும் பட்டியில் தினமும் மாலையில் மேய்ச்சல் வேலை முடிந்து ஆடுகளை விட்டு அடைத்து வைத்துள்ளார். இதனிடையே திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்தது. காலை பொன்னுசாமி பட்டிக்கு வந்து பார்த்தபோது 16 ஆடுகள் இடி தாக்கியதில் இறந்து கிடந்தன.

    காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்
    அருகே ராதா. விசைத்தறி கூலித் தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து ராதா இன்று ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து, காவிதி ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஆற்றில் பரிசலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை பரிசலில் ஏற்க முயற்சி செய்துள்ளார். அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குத்தித்து தற்கொலைக்கு முயன்ற ராதாவை பரிசலில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் சந்திப்பு

    நாமக்கல்லில் கோட்டை அரசு நகர உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி