Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (30.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (30.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (30.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (30.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 30.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  • Last Updated :
    மே தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் நாளை‌ கிராம சபா கூட்டம்!

    தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டு இருக்கும்.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கோடை வெய்யில் தாக்கத்தின் காரணமாக காலை கிராம சபா கூட்டம் 10 மணிக்கு தொடங்க உள்ளது.

    பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்- ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

    கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் வெப்ப அயற்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் அயற்சி, இராணிக்கெட் நோய் தாக்குதலால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க நீா் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். கோழிகளை பாதுகாக்க லசோட்டா தடுப்பூசியை கோழிகளுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண் குழந்தை பாதுகாப்புத்திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

    நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் பெற்றவர்கள் மற்றும் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1992- முதல் ரூ.1500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    பாரதிதாசன் பிறந்தநாள் விழா

    குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.இதையொட்டி பாரதிதாசன் உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்க ளுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயற்சி

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வருகிறார்.

    மாணவிக்கு கடந்த சில மாதங்களாக உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளிக்கு வரும் அந்த மாணவியிடம் மற்ற மாணவிகள் சரியாக பேசுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும் சில மாணவிகள் அந்த மாணவியை ஒதுக்கி வைத்து பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவி கடந்த சில தினங்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி பள்ளியின் மேல்மாடிக்கு சென்றார். அங்கு அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலைக்காக குதிக்க முயன்று உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் பள்ளி வளாகத்தில் திரண்டு அந்த மாணவியை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர்.

    மேலும் பொதுமக்களும் அங்கு திரண்டு உள்ளனர். பின்னர் மாணவிகள் பேசி அந்த மாணவியை கீழே அழைத்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து மாணவியின் பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது.

    அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதிய இரண்டு சக்கர வாகனத்தால் எல்கட்ரீசன் பலி

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவராங்காடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் என்பவர் எல்கட்ரீசன் தொழில் செய்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக அண்ணாநகர் பகுதியில் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திருச்செங்கோடு சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 50மீட்டர் தூரம் வரை திருஞானம் பேருந்து முன்பக்க சக்கரத்தின் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மாவட்ட தலைமை மருத்துவமனையாக
    தரம் உயர்த்தி அறிவிப்பு

    ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை நகராட்சி பகுதியின் பொதுமக்கள் மட்டுமின்றி இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள், விவசாய தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இம்மருத்துவமனை சுமார் 140 படுக்கை வசதிகளைக் கொண்டது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 900 பேர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு செய்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு ராசிபுரம் சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சியும், தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    அரசு பேருந்து நடத்தனரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு

    நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு மாலை 5 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்றவாறு மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும், கண்டக்டரை பணி செய்யவிடாமல் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர் சந்தை அருகே பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவதியடைந்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி