Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (29.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..

நாமக்கல் மாவட்டத்தில் (29.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..

நாமக்கல் மாவட்டத்தில் (29.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (29.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 29.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்!

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற மே 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மே தினமான நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி நாளை மறுநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவிலான கருத்தரங்கம்

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் பொருளாதார துறை சார்பில் அடிப்படை ஆராய்ச்சி முறை மற்றும் புள்ளிவிவர ஆராய்ச்சி மென்பொருள் குறித்து 2 நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தொடங்கி வைத்தார். பொருளாதாரத் துறை தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் ராசிபுரம், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    ரேஷன் அரிசி பறிமுதல்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசைத்தறி கூடங்களில் துண்டு உற்பத்தியை நிறுத்த முடிவு

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறி கூடங்களில் அதிகளவில் துண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துண்டுகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நூல் விலை உயர்வு, அதிகளவில் தேக்கம், விற்பனை சரிவு உள்ளிட்ட காரணங்களால் துண்டு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இதனால் வெடியரசம்பாளையத்தில் துண்டு உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துண்டு தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு வருகிற மே 4-ந் தேதி வரை விசைத்தறி கூடங்களில் துண்டு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள்

    ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடந்து வருகிறது. இதையொட்டி நந்திக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது நந்தி வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை மாத உற்சவத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜை

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை மாத உற்சவத்தினை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏற்றி வந்த கார் மோதி தொழிலாளி பலி

    நாமக்கல் அருகே த டைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏற்றி வந்த கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து சுமார் 480 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வட்டார அளவிலான சுகாதார விழா

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான சுகாதார விழாவின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 2 பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்ட தாய்மார்களுக்கு ஊக்குவிப்பு பரிசு, பள்ளி சிறார் நல திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் நடைபெற்ற கண்காட்சியில் பல்வேறு துறை மற்றும் பேரூராட்சித் துறை சார்பாக பல கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பார்வையிட்டு பயனடைந்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி