Home /local-news /

முட்டை விலை அதிகரிப்பு.. கொல்லிமலையில் ஆட்சியர் ஆய்வு.. நாமக்கல் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்..

முட்டை விலை அதிகரிப்பு.. கொல்லிமலையில் ஆட்சியர் ஆய்வு.. நாமக்கல் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்..

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District நாமக்கல் மாவட்டத்தில் 28.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 28.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய தொகுப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (29.04.2022) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய குறைகளை, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

    பரமத்தி வேலூரில் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி செயலாளர் வரவேற்று பேசினார். இதில் அனைத்து கட்சியினர், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கொல்லிமலையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக கொல்லிமலை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கொல்லிமலை சாரல் உணவகம் விரிவாக்கம் செய்வதற்கான இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழங்குடியின மக்களுக்கு கான்கீரிட் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ், அரிப்பிலாப்பட்டி கிராமத்தில் வீடு கட்ட கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பத்தார்களிடம் விசாரணை செய்தார்.

    அரசு உயர்நிலைப் பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் கவுன்சிலர் வேல்முருகனிடம் புகார் தெரிவித்ததால் பள்ளிக்கு சென்று சத்துணவு சமைக்கும் பணியாளர்களிடம் இதுபற்றி கேட்டு, பட்டியலில் உள்ளபடி சமைப்பதும், சுவையாக சமைப்பதும் இல்லை என்பது தெரியவந்தது. தினமும் பட்டியலில் உள்ளபடி, சமைக்கவும், சுவையாக சமைக்கவும் அறிவுறுத்தினார்.

    விளம்பர பதாகைகளை அகற்றும் பணி

    நாமக்கல் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் வைப்பதன் மூலம் விபத்து ஏற்படுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகாரினை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

    மல்லசமுத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வகுப்பு முடிந்து மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது சாலையில் சென்ற அரசு பேருந்து மீது சில மாணவர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.
    மேலும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை தரக்குறைவாக பேசுவது மிரட்டுவது போன்ற தகாத செயலில் ஈடுபடுவதால் தங்களுக்கும் பயனிகளுக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் தவறு செய்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேருந்தை நிறுத்தினர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மல்லசமுத்திரம் காவல் துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு போரட்டம் கைவிடபட்டு பேருந்து இயக்கப்பட்டது.

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையம் பகுதியில் சரவணகுமார் என்பவர் கூலித்தொழிலாளி செய்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா.கடந்த 15ம் தேதி பட்டுக்கோட்டையில் சரண்யாவின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் சரவணகுமார் மற்றும் மனைவி சரண்யா கலந்து கொண்டுள்ளனர். ஆனால் நிச்சயதார்த்தில் அவர்கள் சீர்வரிசை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்ததாம்.
    இதனால் மனமுடைந்த சரண்யா விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்துள்ளார்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி