ஹோம் /Local News /

திமுக அவசர கூட்டம் முதல், அரசு கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வரை - நாமக்கல் மாவட்ட செய்திகள்.!

திமுக அவசர கூட்டம் முதல், அரசு கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வரை - நாமக்கல் மாவட்ட செய்திகள்.!

நாமக்கல் மாவட்டத்தில் (22.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (22.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal district News : நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (23.04.2022)  முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (23.04.2022)  முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம்!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவசரசெயற்குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் உடையவர் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒரு மருத்துவ முகாம் என மொத்தம் 15 முகாம்கள் நடைபெற உள்ளது.

வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 23ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம், ஆர்.ஜி.ஆர் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு, மகளிர் மேல்நிலைப்பள்ளி நடக்கிறது. மேலும் 25ம் தேதி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கத்திலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்!

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு வருகின்ற 24ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வறுமையில்லா ஊராட்சி, சமூக பாதுகாப்பு கொண்டிருத்தல், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல் போன்றவைகள் விவாதிக்கப்பட உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களாக முட்டை தொடர் சரிவு சந்தித்து வருகிறது.

இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் அரூர் கிராமத்தில் 117 ஹெக்டேர் பரப்பளவில் அரூர் ஏரி அமைந்துள்ளது. விவசாய நிலங்கள் பாசனம் நிரம்பி வரும் முக்கிய நீர் ஆதாரமாக இது உள்ளது. தற்போது இந்த ஏரியில் வளர்த்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் உலக பூமி தினத்தை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் 'மண்ணோடு தொடர்பில் இருங்கள் என்று விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோடை வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை அமோகம்!

நாமக்கல்லில் கொளுத்தும் கோடை வெயிலால் தங்களது சூட்டைத் தணித்துக் கொள்ள மக்கள் சாலையோரங்களில் விற்கப்படும் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை நாடிச் செல்வதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.

உலக பூமி தினத்தையொட்டி கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

உலக பூமி தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முதல்வர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அரசு கலைக் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவுகள்!

நாமக்கல் மாவட்டம் ஆண்டலூர்கேட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாகவும் அடிப்படை வசதிகளே இல்லை என பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து உணவுடன் சாலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்

First published:

Tags: DMK, Egg, Namakkal