Home /local-news /

முட்டை, கறிக்கோழி விலை சரிவு... பாரம்பரிய உணவு திருவிழா.. நாமக்கல் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 20)

முட்டை, கறிக்கோழி விலை சரிவு... பாரம்பரிய உணவு திருவிழா.. நாமக்கல் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள் (ஏப்ரல் 20)

Namakkal

Namakkal

Namakkal District Headlines | நாமக்கல் மாவட்டத்தில் 21.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 21.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு!

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களாக முட்டை தொடர் சரிவு சந்தித்து வருகிறது.

    நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.04.2022) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்லில் கறிக்கோழி விலை குறைந்தது!

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கறிக்கோழி விலை கிலோவுக்கு 106 ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் முட்டைக்கோழி விலை கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெப்பத்தை தணிக்கும் தேங்காய் பூ - விற்பனை படுஜோர்!

    கோடை வெயிலில் உணவு பிரியர்களுக்கு தீணியாக நாமக்கலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ள தேங்காய் பூ விற்பனை சற்று அதிகரித்து உள்ளது.

    பாரம்பரிய உணவு திருவிழாவில் அசத்திய மாணவர்கள்!

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாங்குட்டைபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு அப்பள்ளி மாணவர்கள் உடலுக்கு சத்தான உணவுகளான பாரம்பரிய உணவுகளை செய்து உணவுத் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

    மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய முன்னேற்றக் கழக சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், கரூர் திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு நிகழ்கிறது!

    நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். தற்போது பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மின்வெட்டால் படிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் பொதுமக்கள் புழுக்கத்தால் உறங்க முடியாமல் பலரும் சிரமப்பட்டனர்.

    வட்டார அளவிலான சுகாதார திருவிழா!

    வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரத்தில் ஒரு மருத்துவ முகம் விதம் மொத்தம் 15 முகாம் நடைபெற்றுள்ளது.மேலும் 23 துவங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    "நிழல் விழா நாள்" தேசிய மாணவர் படை சார்பாக கொண்டாடப்பட்டது!

    குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் \"நிழல் விழா நாள்\" தேசிய மாணவர் படை சார்பாக கொண்டாடப்பட்டது.

    அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்!

    சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம், ரெட்கிராஸ், ரெட்ரிப்பன் கிளப் மற்றும் மற்றும் பேளுக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி