Home /local-news /

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து.. அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு - இன்றைய நாமக்கல் செய்திகள்..

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து.. அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு - இன்றைய நாமக்கல் செய்திகள்..

நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்

நாமக்கல் மாவட்ட முக்கிய நிகழ்வுகள்

Namakkal District Headlines | நாமக்கல் மாவட்டத்தில் 19.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 19.04.2022 இன்றைய முக்கிய நிகழ்வுகளை சிறிய தொகுப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை!

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 4 ரூபாய் 30 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்லில் சதுரங்க போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் பஞ்சாயத்து காவேரி ஆர்எஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வசந்த நகர் கிளை சார்பில் முதலாமாண்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றிபெறும் நபர்களுக்கு வெற்றிப் பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    நகர்மன்றத் தலைவர் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அம்மா உணவகம் வளாகத்தில் ஆய்வு செய்து உணவருந்தி குறைகளை கேட்டறிந்தார் திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு. தொடந்து நகர்ப்புற வாழ்வாதார மையத்தினை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டார்.

    பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து - 5 பேர் காயம்

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இருந்து காளிப்பட்டிக்கு 50-க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மொஞ்சனூர் அருகே சென்றபோது, முன்சக்கரம் சாலையோரத்தில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கோயில் திருவிழா முன்னிட்டு கிரிக்கெட் போட்டி!

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் வடக்கு ஒன்றியம் சார்பில், குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் 267 மனுக்கள்

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ந. கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 267 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் வழங்கினார்கள்.

    தீ தொண்டு வார விழா நிகழ்ச்சி

    தீ தொண்டு வார்த்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கங்களை குறித்து நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தீத் தொண்டு வார விழாவை முன்னிட்டு தனியார் காகித ஆலை ஊழியர்கள் மத்தியில் தீ தடுப்பு குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ராமர் சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது!

    நாமக்கல்லில் ஸ்ரீ இராமநவமி உற்சவத்தை முன்னிட்டு 108-ஆம் ஆண்டு ராமர் - சீதா திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சிறப்பு குறைதீர் கூட்டம் - பாராளுமன்ற உறுப்பினர் தகவல்

    நாமக்கல் அருகே உள்ள மோகனூர் பகுதியில் நாளை பாராளுமன்ற உறுப்பினர் சின்ராசு அவர்கள் பொதுமக்களிடையே குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்விடமே விசாரணை செய்து மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்யப்பட உள்ளது.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி