Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (16.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (16.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (16.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (16.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 16.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டத்தில் 16.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சரிவு!
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது நீண்ட நாட்களுக்கு பின்பு முட்டை விலை சரிவு சந்தித்து 4 ரூபாய் 30 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அம்பேத்கர் பிறந்தாள் முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள நரிப்பள்ளம் பகுதியில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் சார்பில் 131-வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை நிறுவி 50 ஆண்டுகள் நிறைவடைந்து ஒட்டி சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் பேசினார்!

    ஒரு வருடத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்வு நாமக்கல் ராசிபுரம் திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய பகுதி விவசாயிகளிடம் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    கோணங்கிப்பட்டி ஊராட்சியில் தார் சாலை பணி தொடக்கம்!

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோணங்கிப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் கோனங்கிப்பட்டி முதல் பொன்னேரி வரையிலான தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 42 லட்சம் மதிப்பீட்டில் தானிய சேமிப்பு கிடங்கு கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தார் சாலை பணியினை தொடங்கி அடிக்கல் நாட்டினார்கள்.

    சித்திரா பௌர்ணமி ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் மலையில் ஏராளமான மக்கள் கிரிவலம்!

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் வருவதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் அதிக அளவு மக்கள் வந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, சாலைகளின் இருபுறமும் பக்தர்கள் கிரிவலம் சென்றதால் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு இடையூறாக ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

    திருச்செங்கோடு தீயணைப்புத் துறை சார்பில் தீப்பிடித்த உடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தீ தொண்டு வார்த்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கங்களை குறித்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட்டது. தீப்பிடித்த உடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை உயர்வு!

    நாமக்கல் மாவட்டம் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூபாய் 112 ஆக இருந்தது. இதனிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை ரூபாய் 113 க்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    மேலும் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூபாய் 68 இருந்து வந்தது. இந்தநிலையில் நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூபாய் 12 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழியின் விலை கிலோவுக்கு ரூபாய் 80க்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    கிணற்றில் மூழ்கி ஒருவர் பலி!

    தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்பவரின் மகனான பிரவீன்குமார் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சியில் நடந்த கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் ஒன்றில் நீச்சல் பழகுவதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அதன் பின் அங்கு கிணற்றில் இறங்கி குளித்த போது திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். உடன் நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணிநேரம் போராட்டத்திற்கு பிரவீன்குமார் உடல் மீட்கப்பட்டது.

    தமிழக முதல்வரிடம் திருநங்கை ரியா வாழ்த்து!


    திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் ரியா அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி