Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (15.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (15.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (15.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (15.04.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 15.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் உயர்வு!

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமுமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 5 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து வருகிறது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 5ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    திருச்செங்கோடு சான்றோர் குல நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

    திருச்செங்கோடு சான்றோர் குல நாடார் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. நாடார் திருமண மண்டபத்தில், தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம்!

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மேலும் அரசிடம் வைக்கப்பட உள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் புனித வெள்ளி முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

    குமாரபாளையத்தில் தேவாலயங்களில் புனித வெள்ளி முன்னிட்டு இயேசுவின் பாடு என்று அழைக்கப்படும் இயேசுவின் சிலுவையினை நகர்புறம் முழுவதும் சுற்றி வந்து இயேசு கிறிஸ்து பிறப்பின் வழிபாடுகள் தேவாலயத்தில் நடைபெற்றது.

    சேற்றில் சிக்கிய லாரியால் சிறிய நேரம் பரபரப்பு ஏற்பட்டது!

    பள்ளிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருவதால், நான்கு சக்கரம், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவை மாற்றுப் பாதையில் செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு பெய்த கனமழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்த நிலையில், திருச்செங்கோட்டில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, ஒன்று மாற்றுப் பாதையில் செல்லாமல் பிரதான சாலைக்கு வந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனை அடுத்து பல மணி நேரம் முயற்சி செய்தும், லாரியை மீட்க முடியாத ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி அக்கம்பக்கத்தினர் மற்றும் JCP உதவியுடன் லாரி வெளியே எடுக்கப்பட்டது.

    மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும். அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி