Home /local-news /

முட்டை விலை உயர்வு முதல் வெளுத்து வாங்கிய மழை வரை.. நாமக்கல் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

முட்டை விலை உயர்வு முதல் வெளுத்து வாங்கிய மழை வரை.. நாமக்கல் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்...

Namakkal

Namakkal

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் 11.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 11.04.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    (11.04.2022) இன்று உழவர் சந்தையில் மாற்றமின்றி விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. சில நாட்களாக உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 5ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து இருந்தது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தமாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் உயர்வு!

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 10 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 4 ரூபாய் 45 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து வருகிறது.

    குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பிக்கலாம்- விவரங்கள் இதோ

    நாமக்கல் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பங்கள் அளிக்க சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு அனுமதியின்றி பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தினால் கடும் நடவடிக்கை!

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, பொருட்காட்சி மற்றும் கோயில் திருவிழாக்களில் மின்சாரத்தால் இயங்கும் ராட்டினங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சமூக கூடங்கள், திறந்த வெளியிடங்கள் மற்றும் கோயில் இடங்களில் நடத்துவதற்கு கண்டிப்பாக அரசின் முன் அனுமதி பெறவேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர திமுக சார்பில் அண்ணா சிலை அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை!

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கியது. தற்போது ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மழையும் பெய்துள்ளது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி