Union
Budget 2023

Highlights

ஹோம் /Local News /

நாமக்கல் மாவட்டத்தில் (09.05.2022) முக்கிய நிகழ்வுகள்.! 

நாமக்கல் மாவட்டத்தில் (09.05.2022) முக்கிய நிகழ்வுகள்.! 

நாமக்கல் மாவட்டத்தில் (09.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (09.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 09.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டத்தில் 09.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 05 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

தண்ணீர் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பெண்கள்

நாமக்கல் டூ திருச்செங்கோடு செல்லும் வழியில் உள்ள தளிகை என்ற ஊரில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீட்டுக்கு தேவையான குடிநீர் பத்து நாளைக்கு மேலாக வராத காரணத்தால் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி இளைஞர்கள் விழிப்புணர்வு பயணம்!

நாமக்கல் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அழிந்து வரும் மரங்களையும், அழிக்கப்பட்டு வரும் மரங்களை பாதுகாக்கவும், மரக்கன்றுகளை நடுவதை ஊக்குவிக்கும் விதமாக, இதனை வலியுறுத்தி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுமார் 15,000 கிலோமீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த புறப்பட்டு சென்றனர்.

கோயில் கும்பாபிஷேகம் திருவிழா

பெரியசோளிபாளையத்தில் விநாயகர், பொன்காளியம்மன் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தீர்த்தம் குடம் எடுத்தல் மற்றும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து

விநாயகர், பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கவுண்டப்பர் உள்ளிட்ட கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குமாரபாளையம் ஜே.கே.கே.முனிராஜா பார்மஸி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்தார்கள் பற்றி அறிமுகப்படுத்திகொண்டனர். மேலும் படிக்கும் போது நடந்த மலரும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்தனர். மேலும் தங்களது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

உழவர் சந்தையில் காய்கறிகள் 7 லட்சத்திற்கு மேல் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் கொண்டு வந்த காய்கறி பழங்கள் கீரை வகைகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் காய்கறிகள், பழ வகைகள் என 24, 230 விற்பனையானது. மேலும் கொண்டு வரப்பட்ட அனைத்தும் காய்கறி,கீரை,பழ வகைகள் 7 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது.

காவல் துறையினர் தீவிர வாகன சோதனை

எருமப்பட்டி அருேக உள்ள வரகூரை சேர்ந்தவர் பாலாஜி என்பவர் பவித்திரம் பகுதியில் கோல்டன் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாலாஜி வெளியூர் சென்றுள்ளார். இதனால் சசிகலா கடையை கவனித்து வந்துள்ளார்.இரவு சசிகலா வழக்கம்போல் பணியை முடித்து கடையை பூட்டு விட்டு சென்றார். நகை அடகு கடை அருகே தனியார் கிளினிக் செயல்பட்டு வருகிறது. கிளினிக் உள்ளே சென்று சுவற்றை துளையிட்டு நகை அடகு கடைக்குள் சென்று கடையில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்றனர். இதனால் அப்பகுதியில் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதி சரிசெய்து தர கோரி மாணவர்கள் போராட்டம்!

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ளது அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி ஆண் பெண் இருவரும் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் விடுதி கடந்த 3 ஆண்டுகளாக சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பல முறை இதுகுறித்து தெரிவித்து நடவடிக்கைகள் எடுக்காததால் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதி சிதிலமடைந்து இடிந்து விழும் சூழலில் உள்ளதை சரிசெய்து தரக் கோரி வகுப்பை புறகணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்கிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 19, 842 பேர் 82 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இதில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு அறை கண்காணிப்பு அலுவலர்கள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளன.

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்

First published:

Tags: Namakkal