Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (07.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (07.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 07.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  பண்ணையாளர்கள் கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்

  கோழி பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகையால் பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள்வதோடு மட்டுமில்லாமல் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிறார்களை பாலியல் ரீதியாக சீண்டினால் சிறை.!

  குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், பாலியல் தொல்லை தருவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை!

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று சரிவு சந்தித்து 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

  இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

  நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

  போதமலை வாழ் மக்கள் கொண்டாட்டம்

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதியில் பல வருடங்களாக மலைவாழ் மக்கள் சாலை அமைத்தல் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தி இருந்தனர். தற்போது போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  திமுக அரசின் ஓராண்டு கொண்டாட்டம்

  தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக சார்ந்த தலைவர்கள்,கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி கூறியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் மரம் நடும் விழா நிகழ்வும் நடைபெற்றது.

  தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

  நாமகிரிப்பேட்டை அருகே தொழிலாளியான மணிகண்டன் மற்றும் இவருடைய மனைவியுடன் வாழ்ந்த வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கஸ்தூரி கணவரிடம் கோபித்து கொண்டு மகனுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.இதையடுத்து மாமனார் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் கஸ்தூரி கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்து காரணத்தால் வேதனை அடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  பட்டா இடத்தில் பூங்கா!

  குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சார்பில் சில ஆண்டுகள் முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த இடம் தன்னுடைய இடம் என காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் உரிய ஆவணங்களுடன் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இந்த இடத்தின் உரிமையாளர் பல வருடங்களாக வெளியூரில் இருந்ததால், இந்த இடம் குறித்து அவரால் அறிய முடியவில்லை. பல வருடங்களாக இடம் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், அரசு நிலம் என்று எண்ணி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

  மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்!

  வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது.

  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 84. 97 லட்சத்துக்கு வர்த்தகம்

  சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூபாய் 84.97 லட்சத்துக்கு விற்பனை ஆனது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

  செய்தியாளர்:சே.மதன்குமார்.நாமக்கல்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Namakkal

  அடுத்த செய்தி