10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆர்வத்துடன் சென்ற மாணவர்கள்!
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 954 மாணவர்கள், 9 ஆயிரத்து 708 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 662 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 89 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கான வினாத்தாள்கள் காவல்துறை பாதுகாப்புடன், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே பொதுத் தேர்வு எழுத மாணவ மாணவிகள் காலையில் நேரமாகவே தேர்வு மையத்திற்கு வந்து ஆர்வத்துடன் தேர்வு எழுத சென்றனர்.
கோயில் திருவிழா முன்னிட்டு குண்டம் இறங்கும் நிகழ்வு - பக்தர்கள் நேர்த்திக்கடன்
அப்பூர்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதியுதவி பெறலாம்!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் வீட்டுமனை வைத்திருந்தால் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி பெற கட்டுமான தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு, இறந்தவர்களின் இறப்புசான்று கொண்டு அரசு இணையதளம் மூலமாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி வருகின்ற 18ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று சரிவு சந்தித்து 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!
நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் செல்வி மற்றும் இவருடைய கணவர் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்து போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பூட்டை உடைத்த மரம் நபர்கள் 70ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 4 சவரண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு சென்று உள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கலில் மாலை நேரத்தில் சூறாவளி காற்று
நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கினாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே பலத்த காற்றுடன் ஒரு சில பகுதிகளில் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் சில இடங்களில் மழை பெய்தது.
மனு கொடுக்கும் இயக்கம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டா நிலம் கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில் பட்டா நிலம் வழங்க கோரி மனு கொடுக்கும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் கோசங்களை இட்டு கோரிக்கை விடுத்தனர்.
வாள் சண்டைப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு!
பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற கேலோ இந்தியா நடத்திய அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வாள் சண்டை போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர்களான சிவசுப்ரமணியன், அரவிந்த வேலன், பிரவீண் ஆகியோர் வாள் சண்டை போட்டியில் பாய்ல் என்ற பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர். அவர்களை நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை!
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி இறந்தது அடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஷவர்மா மற்றும் அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் நாமக்கல் நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தினர். இதில் உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று, உரிமம் பெற்று இருக்க வேண்டும். ஷவர்மா தயாரிப்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர்.மேலும் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.