Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (05.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (05.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (05.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (05.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 05.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 05.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    பிளஸ் 2 தேர்வு எழுத ஆர்வத்துடன் சென்ற மாணவ மாணவிகள்!

    இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது அடுத்து மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு காலையில் நேரமாகவே வர தொடங்கினர். தேர்வு துவங்குவதற்கு முன்பாக தலைமை ஆசிரியர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    இதனிடையே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் முதல் தனியார் பள்ளி மாணவர்கள் வரை தேர்வு எழுதுவதற்கு உற்சாகத்துடன் சென்றனர்.

    தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

    நாமக்கல் டூ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் அருகே லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வழியாக செல்வோர் ஏடிஎம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஏடிஎம் மையத்துக்குள் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தின் பணம் வைக்கும் பகுதியை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் காவல் துறையினர் தங்களை பிடிக்காத வகையில் மிளகாய் பொடியை ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் தூவிவிட்டுச் சென்றுள்ளனர்.

    நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை நடைபெறுகிறது.

    கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு!

    நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தோட்டக்கலை பயிர்களான வாழை, மா, பப்பாளி போன்ற பழ மரங்கள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சேத விபரம் குறித்த தகவல்களை மாவட்ட அளவில், தோட்டக்கலைத்துறையின், 96296 62329 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று சரிவு சந்தித்து 3 ரூபாய் 60 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகள் விடுமுறை

    நாமக்கல்லில் உள்ள நகைக்கடைகள் துணிக்கடைகள் செல்போன் கடைகள் மளிகைக் கடைகள் மற்றும் சிறு வணிக கடைகள் ஆகியவை வணிகர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் பகுதியில் உள்ள கடைவீதி பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டு இருந்தது.

    புதிதாக புனரமைக்கப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம்!

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழா வருடாவருடம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. வைகாசி விசாகத்தன்று தேர் திருவிழாவில் விநாயகர் தேர், பெருமாள் தேர், செங்கோட்டுவேலவர் தேர், அர்த்தநாரீஸ்வரர் என இழுக்க கப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்த தேர்கள் மிகவும் பழமையான ஒன்றாகவும் இருக்கிறது. இதனிடையே மிகப்பழமையான விநாயகர் தேர் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர் பூக்கள், வாழைமரம் என அலங்கரிப்பட்டும், சிறப்பு பூஜைகளும் செய்து பின்னர் விநாயகர் தேரில் எழுந்தருளினார். அதன்பின் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நாமக்கலில் மாலை நேரத்தில் சூறாவளி காற்று

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கி‌னாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே பலத்த காற்றுடன் ஒரு சில பகுதிகளில் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் சில இடங்களில் மழை பெய்தது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கிறது

    தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 954 மாணவர்கள், 9 ஆயிரத்து 708 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 662 பேர் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 89 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கான வினாத்தாள்கள் காவல்துறை பாதுகாப்புடன், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி