Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (01.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (01.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (01.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (01.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 01.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 01.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    மாற்றுத்திறனாளி தொழிலாளர்களின் மே தின விழா!

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு அருகே உள்ள சிறுமொளசி ஊராட்சியில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பாக தொழிலாளர் தினவிழா மாவட்ட சங்க தலைவர் மு. வஜ்ரவேலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

    மாவட்டத்தில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள்

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடிகர் அஜித் குமார் பிறந்த நாள் முன்னிட்டு அஜித் ரசிகர்கள் சார்பில் சிறப்பு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அபிசேகங்களும் அஜித் குமார் பெயரில் செய்தனர். அதுமட்டுமின்றி அனாதை இல்லங்களிலும் உணவு வழங்கியும் கேக்குகள் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    கிராம சபா கூட்டம்

    இன்று மே-1 தொழிலாளர் தினத்தை
    முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தங்களுடைய குறைகளை தெரிவித்தும், மனுக்களாக அளித்தனர். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 20 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.

    பள்ளிபாளையத்தில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோகுல்ராஜ் கொலை வழக்கு வழக்கறிஞர் ப. பா. மோகன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் திருமலைராஜன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில் சிறப்பு பூஜைகள்

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளி தெய்வானை முருகன் உற்சவர் சாமிகள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாசுபாடு உண்டாக்கும் கழிவு பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சூழல் துறையின் வழிகாட்டுதலின்படி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சார்பில் நீர், காற்று, மாசுபாடு உண்டாக்கும் கழிவு பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பசுமை உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதையடுத்து உள்ள வீடுகளில் மஞ்சப்பை அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை வழங்கினர்.

    பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் 1,008 வடைமாலை சாத்தப்பட்டது.

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இதில் சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. மேலும், சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் மற்றும் பால், தயிர் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பத்து வயது குழந்தை கடத்தி சென்ற மர்ம நபர்கள்

    நாமக்கல் - துறையூர் சாலை பொட்டிரெட்டிபட்டி அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் கௌசல்யா தம்பதி
    இவர்களுக்கு 10 வயதுடைய குழந்தை உள்ளது. நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அக்குழந்தை ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறது. சனிக்கிழமை இரவு வீட்டில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக 6 தனிப்படையினர் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி