நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒரு மருத்துவ முகாம் என மொத்தம் 15 முகாம்கள் நடைபெறுகிறது.
வட்டார அளவிலான சுகாதார திருவிழா மற்றும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதன் அடிப்படையில் வருகின்ற 23ம் தேதி (இன்று) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம், ஆர்.ஜி.ஆர் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு, மகளிர் மேல்நிலைப்பள்ளி நடக்கிறது. மேலும் 25ம் தேதி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கத்திலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
அதன்பின் 28ம் தேதி பரமத்தி சமுதாயக்கூடம், எருமப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. அதுமட்டுமின்றி 29ம் தேதி காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொத்தனுார், சேர்மன் பாப்பாத்தி பாலு மண்டபம், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மேலும் 30ம் தேதி மல்லசமுத்திரம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் ஆண் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனி மருத்துவ ஆலோசனை பரிசோதனை சிகிச்சை அளிக்கப்படும்.
பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.