நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார ஊர்களில் விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களுடைய மாடுகள் மற்றும் ஆடுகளை அலங்கரித்து சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கலை வைத்து மாடுகளுக்கு படையலிட்டு மகிழ்ச்சியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார்கள்.
இதற்காக அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள ஆடு,மாடு காளைகளை குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு. மேலும் தாங்கள் புதிதாக வாங்கிக் கொண்டு வந்த மூக்கணாங்கயிறு, கொம்புக்கயிறுகளை மாற்றி,
மாடுகள் மேல் வண்ணக் கலர்களை பூசி புதுப் மாப்பிள்ளை, புதுப் பொண்ணு போன்று அலங்கரித்து கரும்புகள், பழங்கள், பொங்கல் வைத்து மாடுகளுக்கு படையலிடப்பட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபாடு நடத்தினார்கள்.
மேலும் தங்களுடைய வழிபாடுகளை முடித்த பிறகு, வண்ணம் பூசிய கொம்புகளுக்கு மணியும், பலூன்களையும், கால்களுக்கு சலங்கையும் கட்டிவிட்டு தாங்கள் இருக்கும் பகுதியில் ஊர்வலமாக உற்சாகத்துடன் சுற்றி வந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.