தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டு இருக்கும்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கோடை வெய்யில் தாக்கத்தின் காரணமாக காலை கிராம சபா கூட்டம் 10 மணிக்கு தொடங்க உள்ளது.
நாளை நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2 குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.