கடந்த வாரம் இறந்த கோழிகள் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது, கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகையால் பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள்வதோடு மட்டுமில்லாமல் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானிலையை பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே காற்று மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 105.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 80. 6 டிகிரியாகவும் இருக்கும்.
காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 60 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.