Home /local-news /

நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சற்று உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சற்று உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சற்று உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சற்று உயர்வு

Namakkal Egg Price | முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 5 காசுகள் என சற்று உயர்த்தி தற்போது 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து எந்த மாற்றமின்றி 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 5 காசுகள் என சற்று உயர்த்தி தற்போது 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 05 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து உள்ளது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்: சே.மதன்குமார் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி