Home /local-news /

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு - காரணம் என்ன?

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு - காரணம் என்ன?

நாமக்கல் முட்டை 20 காசுகள் உயர்த்தி 4 ரூ. 20 காசுகளுக்கு கொள்முதல்

நாமக்கல் முட்டை 20 காசுகள் உயர்த்தி 4 ரூ. 20 காசுகளுக்கு கொள்முதல்

Namakkal District | நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 7 நாட்களுக்கு முன்பு 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

    இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் உயர்த்தி தற்போது கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு முட்டை விலை 4 ரூபாய் 20 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 20 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஏழு நாட்களாக முட்டை விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முட்டை விலை உயர்வு - காரணங்கள்:

    கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் காரணமாக முட்டையிடும் திறன் கோழிகளுக்கு குறைந்துள்ளது. முட்டை உற்பத்தி குறைவு, தீவன தட்டுபாடு மற்றும் மற்ற மண்டலங்களில் விலை உயர்வு போன்ற காரணிகளால் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால்,முட்டை விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி