Home /local-news /

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை... கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை... கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமில்லை

Namakkal Egg Price : நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் இல்லை, எனினும் கறிக்கோழி விலை கிலோவுக்கு 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 10 காசுகள் குறைத்து தற்போது கடந்த இரண்டு நாட்களாக 4 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 காசுகள் விலை குறைப்பு செய்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து தற்போது கறிக்கோழி விலை கிலோவுக்கு 123 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ 75 ரூபாயாக விலை நிர்ணயக்கப்படுள்ளது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Egg, Namakkal

    அடுத்த செய்தி