Home /local-news /

நாமக்கல் மண்டலத்தில் 5 நாட்களாக முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் 5 நாட்களாக முட்டை விலையில் மாற்றமில்லை

முட்டை விலை உயர்வு

முட்டை விலை உயர்வு

Egg price in Namakkal : நாமக்கல் மண்டலத்தில் முட்டை, ஐந்து நாட்களாக 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு 4 ரூபாய் 05 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 5 காசுகள் உயர்த்தி தற்போது கடந்த ஐந்து நாட்களாக 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, 5 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், முட்டை விலையில் மாற்ற செய்த நாள் முதல் தற்போது வரை எந்த விலை மாற்றமும் செய்யப்படாமல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Egg, Namakkal

    அடுத்த செய்தி