Home /local-news /

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு..

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு..

நாமக்கல் மண்டலத்தில் முட்டை  விலை நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை  விலை நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று உயர்வு

Namakkal Egg Price: நாமக்கல் மண்டலத்தில் ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 5 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்ந்து 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று உயர்வை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிற மண்டலங்களில் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் மக்களிடையே முட்டை விற்பனை சற்று அதிகரித்து உள்ளதாலும் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 05 காசுகள் விலை உயர்த்தி ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக முட்டை விலை குறைவு சந்தித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்வு தொடங்கி இருக்கிறது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Egg, Namakkal

    அடுத்த செய்தி