ஹோம் /Local News /

நாமக்கல் முட்டை விலை அதிரடியாக சரிந்தது

நாமக்கல் முட்டை விலை அதிரடியாக சரிந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிரடியாக 30 காசுகள் குறைப்பு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிரடியாக 30 காசுகள் குறைப்பு!

Namakkal Egg Price : முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 30 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்த மாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 30 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை குறைந்து வருகிறது.

  நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிற மண்டலங்களில் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் கோடைகாலம் என்பதால் வட மாநிலங்கள், வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.

  மேலும், சிறிய கடைகளில் அதிக விலை வைத்து விற்பனை செய்வதால் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 30 காசுகள் விலை குறைத்து ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 80 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்வு சந்தித்து வந்த நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக விலை குறைய தொடங்கி இருக்கிறது.

  இதனிடையே முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) 30 காசுகள் விலையை குறைத்து 3 ரூபாய் 80 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 3 ரூபாய் 50 காசுகளுக்கு வியாபாரிகளிடம் பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

  செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்

  Published by:Suresh V
  First published:

  Tags: Egg, Namakkal