Home /local-news /

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு

Namakkal Egg Price : நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில  நாட்களாக முட்டை விலை உயர்வு சந்தித்து வந்த நிலையில் மீண்டும் விலை குறைய தொடங்கி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு, எந்தமாற்றமும் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து அதிரடியாக 20 காசுகள் குறைத்து தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து முட்டை விலை குறைந்து வருகிறது.

    நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 20 காசுகள் விலை குறைத்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 10 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்வு சந்தித்து வந்த நிலையில் மீண்டும் விலை குறைய தொடங்கி இருக்கிறது.

    மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கறிக்கோழி விலை கிலோவுக்கு 106 ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் முட்டைக்கோழி விலை கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    செய்தியாளர்: சே.மதன்குமார் - நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Egg, Namakkal

    அடுத்த செய்தி