நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு துறையில் சிறந்து நபர்களை கண்டறிந்தும், பெரும்பாலானோரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் பஞ்சாயத்து காவேரி ஆர்எஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வசந்த நகர் கிளை சார்பில் முதலாமாண்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றிபெறும் நபர்களுக்கு வெற்றிப் பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சதுரங்க போட்டியாளர்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த போட்டியாளர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டி SWISS SYSTEM என்ற முறையில் நடைபெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெவ்வேறு விதமான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. இந்த சதுரங்க விளையாட்டு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.