நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை நீடித்தால் அனைத்து மக்களும் வாழ்வாரத்தை இழந்து இக்கட்டான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அன்றாட வேலைக்குச் செல்பவர்கள் பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துவர்கள் வரை மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி சிறு குறு தொழில்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்பதை உணராமல், தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று விலை உயர்வு கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மத்திய அரசு கண்டித்தும், பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி, ரஹ்மத், கிளை செயலாளர் சந்திரன், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPM, Namakkal, Petrol, Petrol Diesel Price, Petrol Diesel Price hike, Protest