நாமக்கல் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயிலுக்கு ஏற்ற வகையில் உணவுப் பிரியர்களுக்கு தீணியாகவும், அதிக சத்துக்கள் நிறைந்ததுமான தேங்காய் பூ விற்பனை அதிகரித்து உள்ளது.
தேங்காய் பூ முதலில் முற்றிய தேங்காய்களை மண்ணுக்கடியில் பதியம் செய்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மண்ணில் இருந்து வெளியே எடுத்து பார்த்தால் அவற்றில் தேங்காய் முளைப்பு இருக்கும்.
அவற்றுக்குள் இருக்கும் பூ அதிக சத்துக்கள் நிறைந்தது. உடல்நலத்துக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது என்பதால் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் இயற்கை பானங்களை அதிகம் தேடிச் செல்கின்றனர்.
அந்த வகையில் உடலுக்கு சத்தான உணவு பொருளாக உள்ளதால் தேங்காய் பூ 100ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. காலை மாலை என இரண்டு வேலைகளில் முக்கிய இடங்களில் விற்பனை செய்து மக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான பொருளை விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் தேங்காய் பூ சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்றவற்றை
உடலிலுள் கலந்து குறைக்கும் வல்லமை கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைகள்,தைராய்டு, வயிற்றுப்புண் குணப்படுத்தும் நன்மைகளை கொண்டது. தேங்காய்ப்பூ இதனை அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவதனால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.